தஞ்சாவூர். ஜன.2.
தஞ்சாவூரில் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் மனபாடமாக ஒப்பித்த பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை பாராட்டு சான்றிதழ் ஆகியவை ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப் பட்டு வருகிறது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த இத்திட்டம் இப்போதும் தொடர்கிறது.
இதனிடையே கன்னியாகுமரி யில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்டு திருக்குறள் முற்றோதல் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 பேர் பங்கேற்றத் தில் சர்பேஸ்,தினேஷ், பிரதிக்ஷா லத்திகாஸ்ரீ ,கபிலன் யாழிசை ஆகிய 6 பேர் 1330 குறள்களை ஒப்பித்து தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மாணவ மாணவி யர்கள் 6 பேரையும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி நினைவு பரிசு, நோட்டு, புத்தகம் ,பேனா வழங்கிய வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உலக திருக்குறள் பேரவை செயலர் பழ. மாறவர்மன் புலவர் கந்தசாமி ,தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகர் வாசர் வட்ட த்தலைவர் கோபாலகிருஷ்ணன் காவேரி வண்டல்கலை இலக்கிய குழு செயலர் யோகம் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்