ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 12வது பட்டம் அளிப்பு விழா
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் செந்தில்ராஜன் பட்டங்கள் வழங்கி விழா பேரூரை
ராமநாதபுரம் பிப். 23-
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி சேர்மன்
டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் நடைபெற்றது.
செய்யது அம்மாள் அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் செய்யதா அப்துல்லா. டாக்டர் சின்னதுரை அப்துல்லா, ஏ. ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 12 வது பட்டமளிப்பு விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் செந்தில் ராஜன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை பற்றி பட்டம் பெறும் மாணவ மாணவிகள் பட்டங்கள் பெற்ற பின் எவ்வாறு எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும். இன்னும் பல பட்டங்கள் பெற வேண்டும். இந்தக் கல்லூரியில் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் தருகின்றனர் அதை உங்கள் வாழ்நாளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். பின்னர் அவர்
85 முதுநிலை பட்டதாரிகளுக்கும் 657 இளங்கலை பட்டதாரிகளுக்கும்
பட்டங்களை வழங்கினார். இத்துடன் பல்கலைக்கழக அளவில் தங்க மெடல் பெற்ற
ஏழு மாணவிகளுக்கும் பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்த 46 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
கல்லூரியின் தாளாளர் ஏ. செல்லத்துரைஅப்துல்லா பேசும்போது, கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு மிகவும் முக்கியமாக கற்றுத் தரப்படுவது ஒழுக்கம். ஒழுக்கமே அனைத்திலும் சிறந்தது என்பதை இங்கு நாங்கள் மாணவ மாணவிகளின் மனதில் பதியும் வகையில் கற்றுத் தருவதை கொள்கையாகவே வைத்துள்ளோம். அத்துடன் கல்லூரியில் கைபேசி கொண்டு வருவதை முற்றிலும் தடை செய்துள்ளோம். மாணவிகளுக்கு தனி கவனம் மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறோம். குறிப்பாக சாதி சமய வேறுபாடு இங்கு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. அமைதியான கல்வி சூழல் பின்பற்றப்படுகிறது, இவ்வாறு பேசினார்.