மயிலாடுதுறை அருகே பரசலூர் வடபத்ர காளியம்மன் கோவில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா; சிறுவர்கள் பால்குடம் சுமந்து ஓம் சக்தி, பராசக்தி என்று சொல்லிக்கொண்டும், பக்தர்கள் சிலர் சாமி வந்து ஆடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பரசலூர் கிராமத்தில் செல்லப்பார் கோவில் வளாகத்தில் வடபத்ர காளியம்மாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 12 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. செம்பனார்கோவில் தாதா விநாயகர் ஆலயத்தில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க மஞ்சள் உடை உடுத்தி விரதமிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட 100க்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்தும் 16 அடி நீளமுள்ள அலகு குத்தியும் பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர். சிறுவர்கள் பால்குடம் சுமந்து ஓம் சக்தி, பராசக்தி என்று சொல்லிக்கொண்டும் வந்தனர். பக்தர்கள் சிலர் சாமி வந்து ஆடியது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து பக்தர்கள் சுமந்து வந்த பாலை கொண்டு வடபத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சிவார்தளும் அன்னதானமும் வழங்கப்பட்டது.