தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு நாடார் உறவினர்கள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையிலும் ராயகிரி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி முன்னாள் தலைவர் அம்மையப்பன் நாடார் வழக்கறிஞர் ராஜன், ஆசீர்வாதம், ஹரிஹர செல்வன் ,ஆனந்த் ,காசிராஜன் ,செந்தூர் செல்வம் ,வழக்கறிஞர் ராஜசேகர் ,மதிவளன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த விழாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது குற்றாலம் பகுதியை தமிழகத்திற்கு பெற்று தந்த பெருந்தலைவர் காமராஜருக்கு குற்றாலத்தில் தமிழக அரசு சார்பில் முழு திருவுருவச் சிலை நிறுவ வேண்டும் என்றும் தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என்றும் எல்லை போராட்ட வீரரும் தமிழகத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட மாபொசி க்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றும்
தமிழனுடைய இசைதான் மூத்த இசை என்று கண்டுபிடித்து கர்நாடக இசைக்கெல்லாம் முன்னோடி இசை தமிழ் இசை தான் என்று நிரூபித்து காட்டிய ஆபிரகாம் பண்டிதருக்கு தஞ்சையில் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜான் டேவிட் நாடார் தொகுத்து வழங்கினார் பொருளாளர் சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார் மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் நன்றியுரை கூறினார்.