சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்
சாத்தூர் அண்ணா நகரில் வைத்து அனுசரிக்கப்பட்டது.இதில் சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வைத்தார். சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு காமராஜர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது சாத்தூர் பிரபு மன்றத் தலைவர் வேலுச்சாமி கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா மேற்கு வட்டாரத் தலைவர் கும்கி கார்த்திக் ஆகியோர் உட்பட
வட்டார துணைத் தலைவர் ஒத்தையால் முத்துவேல் வெள்ளைச்சாமி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கார்த்திக் சிவாஜி சங்கர் பாண்டியன் சத்திரப்பட்டி லட்சுமணன் மகளிர் காங்கிரஸ் தலைவி எலிசா ஆகியோர் கலந்து கொண்டனர்.