நாகர்கோவில் அக்டோபர் -03,
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சற்றமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், தெற்க்காசியா மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணி சர்ச்சில், இரவிபுத்தந்துரை பங்கு தந்தை ரெஜிஷ் ஆகியோருடன் இணைந்து மீட்கப்பட்ட 12 மீனவர்கள் குடும்பத்தினருடன் குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரவிப்புத் தந்துரையை சார்ந்த அருளப்பன் த/பெ ரைமன்ட், அலன் த/பெ ரைமன்ட், ஜான்சன் த/பெ தனிஸ்லஸ், பூத்துரையை சார்ந்த ஷாஜன் த/பெ. மரியகுருஸ், மயிலாடுதுறை மாவட்டம் பழையாரை சார்ந்த மணிகண்டன் த/ பெ கலைமணி, சவாரி த /பெ ரவிக்குமார், ஆலிஷ் த /பெ சுதாகர், மணி த /பெ குமார், கடலூர் மாவட்டம் சுவாமியார்பேட்டையை சார்ந்த நவீன் த/ பெ நடராஜன், காரைகால் மாவட்டம் காரைகால்மேடுவை சார்ந்த சுதீர் த/பெ பாலாகுரு, கிழிஞ்சமேடுவை சார்ந்த பாராதிராஜ் த/ பெ நாகராஜ் ஆகிய 12 மீனவர்களும் கன்னியாகுமரி மாவட்டம் இறைவிப்புத்தந்தரையை சார்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான அலங்கார மாதா என்ற விசைப்படகில் கேரளா மாநிலம் கொச்சின் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி சென்றார்கள். இந்த மீனவர்கள் 20 முதல் 25 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கக் கூடியவர்கள். செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இவர்கள் கோவா ஆழ் கடல் பகுதியில் சுமார் 200 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென படகின் இயந்திரம் பழுதடைந்து நடுக்கடலிலே தத்தளிக்க தொடங்கினார்கள். யாருடைய உதவியும் கிடைக்காமல் இப்படகானது எட்டு நாட்கள் ஓமான் கடல் பகுதிக்கு காற்றினால் இழுத்து செல்லப்பட்டது. செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி அவ்வழியாகப் ஆப்பிரிக்கா சென்று கொண்டிருந்த யுஏஎப்எல் துபாய் என்ற சரக்கு கப்பல் நடுகடலில் தத்தளித்த மீனவர்களுக்கு ஒருநாள் முழுவதும் உடனிருந்து பாதுகாப்பு வழங்கியது. இந்திய மீனவர்கள் 12 நபர்கள் படகுடன் சர்வதேச கடலில் தத்தளிப்பதை மும்பையில் உள்ள இந்திய கப்பல் துறை அதிகாரிக்கு தெரிவித்தனர். மீனவர்களது விசைப்படகு சர்வதேச கடல் எல்லையில் உள்ளதால் இந்திய கப்பல் படைக்கு மீட்க வாயிய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். ஆகவே ஓமான் கடல் பகுதியிலுருந்து கொச்சின் துறைமுகம் வந்துகொண்டிருந்த ஹிளா என்ற சறக்கு இழுவை கப்பல் மீனவர்களை மீட்டு வர சம்மதம் தெரிவித்தது. விசைப்படகு இழுத்து வர வாயிய்ப்பில்லை என்று கப்பல் மாலுமி கூறியதால் மீனவர்களுக்கு விசைப்படகை நடுகடலில் கைவிட்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஹிளா கப்பலில் ஏறி தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டனர். ஹிளா கப்பல் இம்மாதம் (அக்டோபர் ) 1 ஆம் தேதி கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகம் 12 மீனவர்களையும் கரை சேர்நத்தனர். குமரி மாவட்ட மீனவளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரி கொச்சின் சென்று மீட்கப்பற்ற 12 மீனவர்களையும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து கொண்டு சேர்த்தனர். இயந்திரம் பழுதடைந்து 8 நாட்களாக மீட்பு உதவி கிடைக்காததால் ஓமான் கடல் பகுதிக்கு படகு இழுத்து செல்லப்பட்டது. அரசிடம் இழுவை கப்பல் இருந்திருந்தால் படகு மீட்கப்பட்டிருக்கும். ஆர்ட்டிபோன் இருந்திருந்தால் நாங்கள் நாடு கடலில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை அரசுக்கும் உறவினர்களுக்கும் கூறியுறுக்க முடியும். எங்கள் உயிரை காபற்றியயுஏஎப்எல் துபாய் கப்பல் மாலுமிக்கும் ஹிளா கப்பல் மாலுமிக்கும். தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிக்கும். அரசுக்கு நன்றி கூறினர். மீனவர்கள் மீப்பிடிக்க செல்ல வேறு பாடகின்றி குடும்பம் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு திட்டத்தில் ஒரு விசை படகு வழங்கி மீனவர்களின் வாழ்வாரத்தை காத்திடுமாறு கோரிக்கை வைத்தனர்.