சிவகங்கை: பிப்:15
சிவகங்கையில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 12 – ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த இணைகளுக்கு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் சிவகங்கையில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவிலில் இந்த திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றது .
இதில் மணமகள்களுக்கு 4 கிராம் அளவில் தாலி வழங்கப்பட்டு மணமகன்கள் தாலி கட்டி வாழ்க்கையை தொடங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . விழாவில் மணமக்களுக்கு துறையின் சார்பில் சீர்வரிசைகள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது .விழாவில் இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் பாரதி , சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர் சி. எம். துரைஆனந்த் , ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர்கள்
பங்கேற்று சிறப்பித்தனர் .