கோவை, டிச.15
உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11-ம் ஆண்டு தமிழ் அறிஞர்களுக்கான விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா என்.ஜி.பி கலையரங்கில் நடைபெற்றது.
என்.ஜி.பி கல்விக்குழுமங்களின் செயலர் தவமணிதேவி பழனிசாமி வரவேற்புரை ஆற்றினார். மருத்துவர் ரேஷ்மி ராமநாதனின் உடலியல் நடைமுறைக் கையேட்டு நூலை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார்.
விருது பெறுபவர்கள் பற்றி பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் அறிமுகவுரை ஆற்றினார். வேலம்மாள் கல்வி முத்துராமலிங்கம் அறக்கட்டளையின் விருதுகள் தலைவர் வழங்கி சிறப்புரை ஆற்றினார். மருதநாயகம், ஞானசுந்தரம். இயகாகோ என்.சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் வண்ணதாசன் பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருது பெற்றார். பாண்டுரங்கன் உவேசா.தமிழறிஞர் விருதும், வெங்கடேஸ்வரன் டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருதும் பெற்றனர்.
சிறப்பு விருதுகளை சேதுபதி, எழுத்தாளர் புன்னகைபூ ஜெயக்குமார், சூலூர் ஆனந்தி ஆகியோர் பெற்றனர். பேச்சாளர் பாரதி பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் முத்துசாமி நன்றியுரை ஆற்றினார்.