தஞ்சாவூர். டிச.18.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இதுவரை சேதம் அடைந்துள்ளது. 37, 124 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து துறை அலுவலர்களான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை பெய்த வட கிழக்கு பருவமழையின் போது 2 பேர் இருந்து உயிரிழந்துள்ளனர் 15 பேர் காயமடைந்துள்ளனர் ,72 கால்நடைகள் இறந்துள்ளன, 1,172 வீடுகள் சேதம் அடைந்துள்ளன இதில்சேதமடைந்த 529 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது இது தவிர 37 ஆயிரத்து 124 ஏக்கரி ல் நெல் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன என்றார் ஆட்சியர்
.கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் ,உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா.எஸ்.விஜயன், கோட்டாட்சியர்கள் இலக்கியா ஜெயஸ்ரீ , மாநகராட்சி ஆணையர்கள், கண்ணன் லட்சுமணன் உள்ளிட்டோர் கொண்டனர்.