கன்னியாகுமரி செப் 16
அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா நேற்று அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சிக்கு பேரூர் அவை தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் முன்னிலை வகித்தார்.
இதில் கிளைச் செயலாளர் கங்காதரன்,நிர்வாகிகள் அருள் அயப்பன் ,முருகன் ,சுயம்புலிங்கம் ,சிவராமகிருஷ்ணன் ,ராம நாடார் ,ஞானசேகரன் ,தேவகி ,ராஜதுரை ,சோமு,தங்கராஜா ,சுதா ,தர்மகண் உட்பட பலர் கலந்து கொண்டு அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.