நாகர்கோவில் ஜூலை 16
ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதில் ஆற்றிய பங்கின் காரணமாக கல்வித் தந்தை என்று அழைக்கப்பட்ட
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 112 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு
நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவச் சிலைக்கு சமூக சேவகர் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் மருத்துவர் நாகேந்திரன் காமராஜர் சிறப்புகள் குறித்து தின தமிழ் பத்திரிகை செய்தியாளரிடம் பிரத்யோகமாக தெரிவித்ததாவது :-
காமராசர் கல்வி முறையிலும் உள்கட்டமைப்பிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தார். இராசாசி கொண்டு வந்திருந்த குடும்பத் தொழில் அடிப்படையிலான தொடக்கக் கல்வியின் மாற்றியமைக்கப்பட்ட திட்டம் திரும்பப் பெறப்பட்டு, 11 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி இலவசமாக வழங்கியவர் காமராஜர் . மாணவர்கள் நீண்ட தூரம் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு 3 கிலோமீட்டர் சுற்றளவிலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று கல்விக் கொள்கை வகுத்தவர். இதன் விளைவாக, முன்பு மூடப்பட்ட ஏறத்தாழ 6,000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பப்பட்டன மற்றும் 12,000 புதிய பள்ளிகள் திறந்தவர்.
மாணவர் சேர்க்கை குறைவு மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டபோது, காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தினார். பள்ளிகளில் சாதி மற்றும் வேறுபாடுகளை களைய இலவச சீருடைகளை வழங்கியவர்.காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.அப்படிப்பட்ட மாமனிதரை குமரி மாவட்ட மக்கள் அப்பச்சி என்று அன்போடு அழைத்தனர், அது மட்டுமல்லாமல் காமராசரை கல்விக்கண் திறந்த கர்மவீரர்,படிக்காத மேதை என பல சிறப்புப் பெயர்களில் தமிழக மக்கள் மட்டுமல்ல அனைத்து உலகினரும் அழைக்கும் பெருமைக்குரியவர் ஆவார் காமராஜர். எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை, வரலாறு படைத்தவர்கள் என்றைக்கும் தங்களுக்காக வாழ்ந்ததில்லை. வெல்லட்டும் அவர் புகழ் அவர் வித்திட்டு முளைக்கச் செய்த கல்வியும், பாடசாலைகளும் இருக்கும் காலம் வரை அவர் கல்விக்காக ஆற்றிய பங்கு நிலைத்திருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.உடன் தென்குமரி கல்விக்கழக செயலர் வழக்கறிஞர் வெற்றிவேல் மற்றும் பலர் இருந்தனர்.