திருப்பத்தூர்:ஜன:19,
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட தோரணம்பதி ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு தோரணம்பதி கிளை செயலாளர்கள் முருகன்,சுரேஷ், சேகர்,முனியப்பன் மகளிர் அணி ஜெயலட்சுமி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கந்திலி ஒன்றிய செயலாளர் T.T.C. சங்கர் முன்னாள் மாவட்ட சேர்மன் லீலா சுப்ரமணியம் ஆதியூர் ஊரட்சி தலைவரும் மாட்ட பிரதிநிதியுமான
மூர்த்தி மற்றும் தொழிலதிபர் ஸ்ரீதர் போன்ற முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.