ராமநாதபுரம் செப் 08-
ராமநாதபுரம் அருகே வழுதூர் ஸ்ரீ அருளொளி விநாயகர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை
ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அருளொளி விநாயகர் ஆலயத்தில் 57 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது- கடந்த 29ஆம் தேதி காப்பு கட்டுடன் விழா துவங்கியது இதனைத் தொடர்ந்து ஆன்மீக பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக காப்பு கட்டி விரதம் இருந்தனர்
ஒன்பது நாட்களும் விநாயகப் பெருமானுக்கு பால் பன்னீர் இளநீர் மஞ்சள் பொடி திரவிய பொடிகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது
விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சுமங்கலி பெண்கள் இளம் பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது அழகன்குளம் பிரேமா குழுவினர் திருவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தி வைத்தனர் உலக நன்மை வேண்டியும் கல்வி செல்வம், திருமணத்தடை நீங்குதல் மன அமைதி மருத்துவமில்லா வாழ்வு ஆகியவை வேண்டி அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்
இன்று 57 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அருளொளி விநாயகப் பெருமான் ஆலயத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க நாக மண்டகப்படி சென்று அங்கு ஆன்மீக பக்தர்களுக்கு அருள் பாலித்து பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சிறப்பு அறுசுவை அன்னதானம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை வழுதூர் அருளொளி மன்றத்தினர் செய்திருந்தனர்