தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2021ம் ஆண்டு வரை 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் திட்ட இயக்குனர் முன்னிலையில் முறையாக நடந்து வந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக சேவையின் முதுகெலும்பான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கான வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு
மண்டல செயலாளர் முகைதீன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார் . மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெள்ளத்துரை, மாவட்ட துணைத் தலைவர் பொன்னுச்சாமி
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மகாமுனி கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுஜின் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.