ஈரோடு டிச 7
வங்க தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் சொத்துக்களை உரையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வங்க தேசத்தில் சிறுபான்மையினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கோரியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடந்த து. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இருப்பினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதை தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். 22 பெண்கள் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.