வேலூர்-18
வேலூர் மாவட்டம் வேலூர் கலாஸ்பாளையம், கலாஸ் வளையல்கார வீதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீ பாண்டுரங்கநாத சுவாமி ஆலயத்தின் 104 ஆம் ஆண்டு ஆஷாட சுத்த ஏகாதசி விரத மகோத்ஸவ விழாவினையொட்டி பஜனை குழுவினர்களுடன் பாலாற்று தீர்த்தத்துடன் புறப்பட்டு வந்து ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரங்கநாதர் சுவாமி திருமஞ்சனமும், பஜனை குழுவினர்களுடன் சுவாமி புஷ்ப விமானத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும், வசந்த திருக்கோல உற்சவமும் ,விடையாற்று உற்சவமும், வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் அறங்காவலர் கோட்டா எஸ். ஸ்ரீனிவாச செட்டி, ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீமத் பாண்டு ரங்கநாத சுவாமி பஜனை மண்டலி மற்றும் கலாஸ்பாளையம் பேட்டை வாசிகள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்