பிப்:9
திருப்பூர் விவசாய சங்கம் தலைமை அலுவலகத்தில்
நிறுவனத் தலைவர் G.K.விவசாயமணி (எ) G.சுப்பிரமணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் அய்யா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சங்க மாநில நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.