[11:28 am, 30/12/2024] +91 96777 06646: ஊட்டி. டிச. 31.
நீலகிரி மாவட்ட காவல்துறை மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் உபயோகம் தடுக்கப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்டத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து ( கர்நாடகா, கேரளா ) அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை நீலகிரிக்குள் ஊடுருவ செய்கின்றனர். இதனை நீலகிரி போலீசார் சோதனை சாவடிகளில் தீவிரமாக பரிசோதித்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருஒப்புக்இந்நிலையில் குன்னூர் டிஎஸ்பி. மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், உதவி காவல் ஆய்வாளர்கள் வனக்குமார், யுவராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று ராம்சந்த் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த பிக்கப் வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் 101 கிலோ இருந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து போலீசார் கைப்பற்றிய வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த யாக்கியாவுதீன் மற்றும் கோத்தகிரி ஒரசோலை பகுதியை சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மைசூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோத்தகிரி வந்ததாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கொண்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.
[11:28 am, 30/12/2024] +91 96777 06646: விசாரணையில் மைசூரில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக கோத்தகிரி வந்ததாகவும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய புகையிலைப் பொருட்களை கொண்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் கடத்தல் பொருட்களை பிடித்த போலீசாரை மாவட்ட எஸ்பி நிஷா பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அவர் கூறுகையில் காவல்துறையால் மட்டுமே போதையின் பாதையை மாற்ற முடியாது இதற்கு உறுதுணையாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக தன்னார்வலர்கள், ஊடக பத்திரிகையாளர்கள், வணிக கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போதையில்லா தமிழகம், போதையில்லா நீலகிரி என மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். போதைப் பொருட்களை கடத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த கோத்தகிரி காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.