தஞ்சாவூர் ஆகஸ்ட் 17
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 101 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய பண்டிகை விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் கடைகள் வணிக நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்றி விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 163 நிறுவனங்களில் தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடைகள் நிறுவனங் களில் 59 முரண்பாடுகள், உணவு நிறுவனங்களின் 37 முரண்பாடு கள் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் 5 முரண்பாடுகள் என மொத்தம் 101 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது எனதஞ்சாவூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.