மதுரை ஜூலை 14,
மதுரை திருப்பரங்குன்றத்தில் 1008 திருவிளக்கு பூஜை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி இத்திருக்கோயிலில் வரும் ஆடி 4 ஜூலை 20 ந்தேதி சனிகிழமையன்று ஆடிப்பெளர்ணமியும், ஆடி 13, திங்கட்கிழமை 29 ந்தேதி ஆடி கார்த்திகையும், ஆடி 19, ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 4 ந்தேதி ஆடி அமாவாசையும், ஆடி 22 புதன் கிழமை ஆகஸ்ட் 7 ந்தேதி ஆடி பூரம்,
மற்றும் ஆடி 31, ஆகஸ்ட் 16 ந்தேதி வெள்ளிக்கிழமையன்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும் என்பதை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் நா.சுரேஷ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இத்திருவிழாக்கான ஏற்பாடுகளை
அறங்காவலர் குழுத்தலைர் ப.சத்யபிரியா, அறங்காவலர்கள் நா.மணிச்செல்வம், திமு.பொம்மதேவன், வ.சண்முகசுந்தரம், தி.இராமையா
மற்றும் கண்காணிப்பாளர், கோவில் பணியாற்றினார்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.