வேலூர் 27
தமிழக வெற்றி கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் வேலூர், காட்பாடி, கே. வி. குப்பம், குடியாத்தம் தொகுதிகள் சார்பில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது. அதில் வேலூர் மாவட்டம் சார்பில் மினி வேன்கள் 200, கார்கள் 100, பேருந்துகள் 20 என பயணம் செல்ல மாநாட்டில் பங்கேற்க தயார் நிலையில் உள்ளன. இந்த மாநாட்டில் 10, 000 பேர் மேற்கண்ட வாகனங்களில் செல்ல உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொகுதி பொறுப்பாளர் டாக்டர் எம். பிரபு செய்துள்ளார். தளபதி விஜய்யின் கரங்களை வலுப்படுத்த வேலூர் மாவட்டம் ஆயத்தமாக உள்ளது என டாக்டர் எம்.பிரபு தெரிவித்துள்ளார்.