தஞ்சாவூர் ஏப்ரல் 9.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், வணிக நிறுவனங் கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரியில் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும்.மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தி உள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகளின்படி பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அனைத்து வகை யான தொழிற்சாலைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.
இதனை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராக கொண்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் தொழிலாளர் துறை, தமிழ் வளர்ச்சித் துறை ,உணவு பாதுகாப்பு துறை ,உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளனர்
கண்காணிப்பு குழுவின் மூலம் மாவட்டத்தில் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அடுத்த மாதம் மே 15 ஆம் தேதிக்குள் 100 சதவீத தமிழில் பெயர் பலகை வைப்பதே உறுதி செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது .அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்க ப்படும்
எனவே அனைத்து கடைகள் வணிகர் சங்கங்கள் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் தொழிற் சாலைகள் தங்கள் குழு உறுப்பினர் களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாவட்டத்தில் 100 சதவீதம் தமிழில் பெயர் பலகை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் .
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது