டிச. 19
திருப்பூர்மாநகராட்சி அபரிமிதமாக
6 சதவீதம் சொத்து வரிஉயர்வு, மின் கட்டண உயர்வு,மத்திய அரசு வாடகை கட்டிட GST வரி விதிப்பை கண்டித்து திருப்பூர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மத்திய, மாநில அரசுகள் கவனத்தை இருக்கும் வகையில்,வரி வியர்வை திரும்ப பெற கோரி
திருப்பூரில் இன்று முழு கடையடைப்பு.
1 லட்சத்திற்கு மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னலாடை தொழில்துறையினர்,
வணிகர்கள்,அரசியல் கட்சியினர்கள் ஆதரவு.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது ஆண்டுக்கு 6 சதவீதம் வரி உயர்வும், மத்திய அரசு வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது,இந்த வரி உயர்வால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்கள், பின்னலாடை தொழில் துறையினர்,அரசியல் கட்சியினர்கள் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த வரி உயர்வை மத்திய மாநில அரசுகள் ரத்து செய்யக் கோரி திருப்பூர்
அனைத்து வணிகர்கள் சங்க பேரவை சார்பில்
இன்று ஒரு நாள் மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் அறிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது ,
இந்த முழு கடையடைப்பு போராட்டத்திற்கு திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் கோன் அட்டை வியாபாரிகள் சங்கம்,திருப்பூர் தையல் நூல் வியாபாரிகள் சங்கம்,திருப்பூர் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்,
சிறு, குறு தொழில் அமைப்புகள் ,உள்ளிட்ட 40 அமைப்புகள் மற்றும் அதிமுக ,பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,கொங்குநாடு விவசாயிகள் கட்சி,மனிதநேய மக்கள் கட்சி, ஆகிய கட்சியினர்கள் திருப்பூர் தொழில் துறையினரின் பாதிப்புகளை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் இந்த ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,
மாவட்டத்தில்
திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர், தாராபுரம், பல்லடம், ஊத்துக்குளி உட்பட அனைத்து ஊர்களில் உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.