நாகர்கோவில் .ஜூலை 22
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் உள்ள ஒரு துணிக்கடைக்கு உடையார்விளையை சேர்ந்த தினேஷ் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் தங்களது இரண்டு வயது குழந்தையுடன் துணி எடுக்க வந்தனர் . பின்னர் துணி வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பி சென்றனர். அப்போது குழந்தையின் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் காணவில்லை அதை துணிக்கடையில் தவறவிட்டது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து தினேஷ் உடனடியாக துணிக்கடை தொலைபேசியில் தொடர்பு கொண்டு செயினை தவறவிட்ட விவரத்தை கூறினார் இதை தொடர்ந்து ஊழியர்கள் கடையில் தேடிய போது செயின் கிடந்தது பின்னர் அந்த செயினை கோட்டார் போலீஸ் நிலையத்தில் துணி கடைக்காரர் ஒப்படைத்தார் .இந்த விவரத்தை தினேஷிடமும் துணிக்கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து தினேஷ் உடனடியாக கோட்டார் காவல் நிலையத்துக்கு சென்றார் அங்கு தன் மகன் அணிந்திருந்த செயின் அடையாளத்தை கூறினார் அதனால் செயினை தினேஷிடம் போலீசார் ஒப்படைத்தனர்.