பூதப்பாண்டி – நவம்பர் -05-
குமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளை பெரிய தெரு,பள்ளி தெரு,தைக்கா தெரு,விளையத் தெரு ஆகியபகுதிகளுக்குரூபாய் 1கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணியினை பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் துவங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஐ.கேட்சன் பேரூராட்சி கவுன்சிலர்கள் நபிலா ,யூனுஸ் பாபு, மரியஅற்புதம் திமுககிளைச் செயலாளர்கள் அன்சார் அலி ,ரபீக் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.