தஞ்சாவூர்.ஆகஸ்ட் 18
தஞ்சாவூர் ஆயுத படை மைதானத் தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
விழாவில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் நின்று கொண்டு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டா ர்.அதன் பின்னர் மூவர்ண பலூன் கள் மட்டும் சமாதான புறாக்களை பறக்கவிட்டார்.
இதையடுத்து, சுகந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவருடைய வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கெளரவித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூபாய் 1.59 லட்சம் மதிப்பி லும், தாட்கோ சார்பில் 303 பேருக்கு ரூபாய் 1.68 கோடி மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்று ம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 71 பேருக்கு ரூபாய் 4.65 லட்சம் மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூபாய் 9.40 லட்சம் மதிப்பி லும் உள்பட பல்வேறு துறைகளில் சார்பில் மொத்தம் நாள் 411 பேருக் கு ரூபாய் 1.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்
தொடர்ந்து சிறப்பாக பணியாற் றிய 215 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் அதன கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர் மெட்ரிகுலேஷன் பள்ளி, மானேஜிப்பட்டிஆதிதிரா விடர் நல உயர்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் மகளிர் கிறிஸ்துவ மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் குழந்தைகள் நலக் காப்பகம் ஆகியவை சேர்ந்த 212 மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
விழாவில்தஞ்சாவூர் சரக காவல் . துணை தலைவர் ஜியாவுல் ஹக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், மாவட்ட வன அலுவ லர் அகில் தம்பி, தஞ்சாவூர் மக்கள வை உறுப்பினர் முரசொலி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர் (திருவையாறு ) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மேயர் சண் ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்) பூர்ணிமா (கும்பகோணம்) ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.