அரியலூர், டிச;12
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டு, 34 மனுக்கள் ஏற்கப்பட்டும், 01 மனு தள்ளுபடி செய்யப்பட்டும், 30 மனுக்கள் விசாரணையிலும் உள்ளது. மேலும், நேற்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 26 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் ஆணைகளும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.87,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.26,698 நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை (பொது விநியோகம்) 06 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைத் துறையின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.4,648 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.12,250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 07 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.67,72,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், கோவிந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் 65 பயனாளிகளுக்கு ரூ.53,11,602 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு ரூ.1,22,14,598 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது,
இம்முகாமில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளரச்சித்திட்டம், சமூக நலத்துறை, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வதார இயக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள். எனவே, பொதுமக்கள் இத்தகைய முகாம்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து, இம்முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டபணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியர் (பொ) கீதா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, கோவிந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் மற்றும் அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்