வேலூர், மே. 12-
வேலூர் அரியூர் வசந்தம் நகர் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ நடராஜா நாட்டியஞ்சலி சலங்கை பூஜை விழா .
வேலூர் மாவட்டம் ,வேலூர் அரியூர் வசந்தம் நகர் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ நடராஜா நாட்டியஞ்சலி சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளி ஸ்ரீபுரம் பொற்கோயில் அறங்காவலர் மற்றும் இயக்குனர் டாக்டர் எம் சுரேஷ் பாபு ,ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம் டாக்டர் ஜி . கோதண்டன் (டி எஸ்பி ஓய்வு ) ,சென்னை ஸ்ரீபெரும்பத்தூர் குளோபல் எலக்ட்ரிக்கல் டெக்னாலஜி திருவருள் திருக்கூட்டம் பவுண்டேஷன் எம் .சுதாகர், ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சலங்கை பூஜை விழாவில் கலந்து கொண்ட ஜனப்பிரியா, காவியா ,கோதை, மதுரிதா ,தணிஷ்கா, காவியா, யாஷிகா கண்ரா ,அம்ருத ப்ரியா, தர்ஷினி, லித்திகாஸ்ரீ ,ஜெய்ஷ்னவி ,சாஹனாஸ்ரீ, ஆகிய மாணவிகளுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்தனர். உடன் குரு நாட்டிய கலா விபூஷன் எஸ்.சிவ தெய்வலக்ஷ்மி சதீஷ்குமார், அரியூர் கிராம நாட்டாண்மை சேகர், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.