கன்னியாகுமரி மே 8
குமரி மாவட்டம் வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வருகை தந்த விஜய் வசந்த் எம் பி -யை ஊர் தலைவர் முனைவர் ரெத்தினசிகாமணி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். உடன் ஊர் நிர்வாகிகள் ராமச்சந்திரன் , சுயம்புலிங்கம், முருகேசன் , ரெத்தினசாமி, திமுக முன்னாள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுதன்மணி, காங்கிரஸ் வட்டார தலைவர் டேனியல், பேரூராட்சி கவுன்சிலர் ராகவன் உட் பட பலர் உள்ளனர்.
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு சாமி தரிசனம்

Leave a comment