கீழக்கரை மே 04,
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன் இணைந்து ரோட்டரி சங்கம் கீழக்கரை முக்கு ரோட்டில் மோர்பந்தல் அமைத்து பிரயாணிகளுக்கு மோர் வழங்கினர். இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜ சேகர் (Rotaract Club of SHASC )கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்.சம்சுல் கபீர் , மருத்துவர் ராசிக்தீன் , முன்னாள் தலைவர் Dr. சுந்தரம், மிப்தாஹூதீன் மற்றும் முன்னாள் செயலாளர் கார்த்திக் மற்றும் ரோட்டராக்ட் சங்க தலைவர் சபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மோர் பந்தல் கோடை காலம் என்பதால் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இந்நிகழ்வை Staff Advisor சதாம் உசேன் மற்றும் ரோட்ராக்ட் சங்க மாணவர்கள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
வெயிலுக்கு ரோட்டரி மற்றும ரோட்டராக்ட் சங்கத்தினர் மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் கீழக்கரையில் மோர் பந்தல்
Leave a comment