வேலூர்; மே 04,
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்
வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் முன்பாகவே 110 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் பதிவாகி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் காலை 10 மணிக்கே உச்சி வெயில் வாட்டி எடுத்து வருகிறது.
வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள தண்ணீர் பந்தலினை பொதுமக்கள் வந்து அதிக அளவில் மக்கள் கூடும் வள்ளிமலை ரோடு காட்பாடி பேருந்து நிலையத்தில் காட்பாடி வடக்கு பகுதி திமுக பகுதி தலைமை பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி, கிரணி பழம், இளநீர் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார் உடன் வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா லோகநாதன், அன்பு, சித்ரா மகேந்திரன், மற்றும் லோகநாதன் நடராஜன் நான்காவது வட்டச் செயலாளர் ராஜேஷ், கோபால் சேகர் டி .என். சிவக்குமார் ,சேட்டு ,சிவா ,ஸ்ரீ (எ) சீனிவாசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.