கிருஷ்ணகிரி,மே.7
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.8% தேர்ச்சி பெற்ற நிலையில் V.மாதேபள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி அடைந்து வேப்பனப்பள்ளி வட்டார அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த பள்ளியில் படித்த மாணவி ஜிவேரியா தபஸ்சு 589 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். மதிப்பெண்கள் விவரம் வருமாறு தமிழ் 99 ஆங்கிலம் 94 இயற்பியல் 100 வேதியல் 99 உயிரியல் 99 கணக்கு 98 என மொத்தம் 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பர்ஹின் கான் மற்றும் விஷ்ணு ஸ்ரீ ஆகியோர் 570 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும்,ரதிசங்கர் 563 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும், பிடித்தனர். மேலும் இந்த பள்ளி ஆனது தொடர்ந்து பல ஆண்டுகளாக 100% வழங்கி வருகிறது. முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் தாளாளர் வி. ஜெயராமன்,பள்ளி முதல்வர் எம்.எஸ்.தனுஜா ஜெயராமன்,பள்ளி செயலாளர் நவீன்குமார் ஆகியோர் நினைவு பரிசும் இனிப்புகளும் வழங்கி பாராட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இந்த வட்டார அளவில் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வரும் ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்யை பெற்றோர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 100% தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளியின் தாளாளர் ஜெயராமன் அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.