நாகர்கோவில் மே 4,
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் நாகர்கோவிலில் மாநகராட்சி சொந்தமான கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் உள்ளது.
இது மாவட்டத்திலேயே மிக முக்கியமான பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்து தான் பெங்களூர், ஓசூர், சென்னை, கோவை, கேரளா உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகிறது. எனவே இந்த பேருந்து நிலையத்திலிருந்து இரவு பகல் பாராமல் எந்த நேரமும் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் குடிநீர் வசதி கூட மாநகராட்சி நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அதே வேளையில் குடிநீர் குழாய்களிலிருந்து தண்ணீர் வீணாகி வருவதையும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. குடிநீர் வசதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்படாததால் தனியார் கடையில் உள்ள பாட்டில் குடிநீர்களை பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்வதால் பொதுமக்களின் பணம் வீணாக விரையம் ஆவதாகவும் இப்பகுதியில் உள்ள கடைகாரர்களுக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகள் புலம்பி செல்கின்றனர்.