கன்னியாகுமரி மே 5
குமரி மாவட்டம் குளச்சலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் ஐயா கு.காமராஜர் அவர்களின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று தன்னுடைய பணியை திறம்பட செய்த அன்னை லூர்தம்மாள் சைமனின் 21-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குளச்சல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருஉருவ சிலைக்கு, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் குமரி காங்கிரஸ் கமிட்டி கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர், யூசுப்கான், ஆரோக்யராஜன், திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், மீனவர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணை தலைவர் பிரான்சிஸ், செயலாளர் ஜெறோம், குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோசப் மணி, மற்றும் குமரி மாவட்ட விசைபடகு மற்றும் மீன்பிடிப்போர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
லூர்தம்மாள் சைமனின் 21 வது ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் – விஜய் வசந்த் எம் பி
Leave a comment