இராமநாதபுரம் மே 07
பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 6302 மாணவர்களும், 7247 மாணவிகளும் என மொத்தம் 13,549 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று தேர்வு முடிவுகள் வெளியிட்ட முடிவின்படி 5850 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 92.83% தேர்ச்சி அடைந்துள்ளனர். 7007 மாணவிகள் தேர்ச்சி பெற்று 96.69% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் மாவட்ட அளவில் 94.89% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 19 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவிபெறும் 36 மேல்நிலைப்பள்ளிகளில் 04 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 53 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் 37 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.