செங்கல்பட்டு, மே.11-
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் செங்கல்பட்டு மாவட்டத்தின் சார்பில் பணி நிறைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் விழாவினை சிறப்பித்தனர் இந்நிகழ்வில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் தனலட்சுமி மீனா குமாரி சுந்தர புஜாம்பாள் ராஜலட்சுமி ராதாகிருஷ்ணன் தாமோதரன் ஆகியோரை பாராட்டும் பொருட்டு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தங்கமணி மாநில பொதுச் செயலாளர் எழிலரசன் கௌரவ தலைவர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கினர் இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மணி வேலு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் விழாவின் ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் உதயகுமார் ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி கௌரவச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர் இந்த விழாவில் பணி நிறைவு பெற்ற அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கிரீடம் அணிவித்து மலர் மாலை சூட்டி பரிசலித்து மகிழ்ந்தனர் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தலைமை ஆசிரியர்களும் பணி நிறைவு பெற்ற பாராட்டியும் விழாவை மேலும் மெருகேற்றி ஆடல் பாடல் கவிதை போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.