கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகளுக்கு சீரான மின் இணைப்பு வழங்கும் பணிகள், கூடுதல் நூலக கட்டிட பணிகள், நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்று வரும் சாலையின் குறுக்கே பாலங்கள் கட்டுமான பணிகள், அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர் விடுதி கட்டுமான பணிகள், வேளாண் காடுகள் திட்டத்திற்கு மரக்கன்றுகள் உற்பத்தி பணிகள், ஓசூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கழிவு நீரேற்று நிலையம் அமைப்பது தொடர்பாகவும், கால்வாய்கள் தூர்வாரும் பணிகள், மின்கம்பங்கள் மாற்றும் பணிகள், கோடை காலத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கூடுதலாக குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், கூடுதல் ஆட்சியர் .வந்தனா கர்க் ., ஓசூர் மாநகராட்சி ஆணையர் .டி.சினேகா ., ஓசூர் சார் ஆட்சியர் செல்வி.பிரயங்கா ., மாவட்ட வன அலுவலர் செல்வி.கார்த்திகேயாயிணி இவப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது.பி.புஷ்பா, அனைத்துதுறை முதன்மை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அரசிதழ் பதிவுப் பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
Leave a comment