சிவகங்கை :மே -07
தமிழகம் முழுவதும் +2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது . இதில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் 69 இயங்குகின்றன .
இதில் 21 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது .
அரசு முழு உதவி பெறும் பள்ளிகள் 23 இதில் 5 பள்ளிகள் 100 % தேர்ச்சி பெற்றுள்ளது . அரசு உதவியில் ஒரு பகுதியாக உதவி பெறும் பள்ளிகள் 14 இதில் 9- பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 53 இயங்குகின்றன. இதில் 38 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது . சுயநிதி பள்ளிகள் 3 இயங்குகின்றன . இதில் 3 பள்ளிகளுமே 100% தேர்ச்சி அடைந்துள்ளது. சமூக நலத் துறையின் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் ஒன்று அதில் அதே பள்ளி 100% தேர்ச்சி அடைந்துள்ளது .
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 163 – மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன . இதில் 77 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது . இந்தத் தகவல் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.