திருவண்ணாமலை மே 08
பிராண்ட்ஸ் நெக்ஸ்ட் தலைமை செயலாக்க அதிகாரி P.ரவீந்திரன் இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய போது தென்மாநிலங்களில் மாறாத அரிசியின் சுவைக்கு உத்திரவாதம் கொடுத்து மக்களின் ஆதரவோடு வலுவாக காலூன்றி வரும் மக்களுக்கான ஓர் முன்னணி நிறுவனமாக வேகூல் உள்ளது, இந்நிறுவனம் தனது துணை நிறுவனமான பிராண்ட்ஸ் நெக்ஸ்ட் மூலமாக தற்போது திருவண்ணாமலையில் மதுரம் பிராண்ட் பொன்னி புழுங்கல் ராஜபோகம் மற்றும் இட்லி அரிசி வகைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. தீப நகரம் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை கண்டு தரிசிக்க தினசரி பல லட்சம் பக்தர்கள் வருகை புரிந்து இறை தரிசனம் பெற்று அன்னதானத்தின் மூலம் புண்ணிய பலனை உருவாக்கும் இடமாக இருப்பதால் இந்நகரில் தங்களின் தரத்திற்கு பெயர் போன மதுரம் அரிசியை அறிமுகம் செய்வதில் வேகூல் நிறுவனம் மிகவும் பெருமை கொள்கிறது. மேலும் சுவையின் கூடவே சரியான விலைக்கான உத்திரவாதம் கொடுக்கப்படுவதனால் மக்களின் ஆதரவு தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது மதுரம் பிராண்ட் அரிசியின் தனித்தன்மைகளானவை – கனிசமான உபரி நறுமணம் ஊட்டச்சச்த்து மற்றம் ஒன்றோடு ஒன்று ஒட்டாத மெல்லிய அரிசியின் தன்மை என்பதாகும் இந்த இந்நிறுவனத்தின் அரிசி வகைகள் அன்றாட சமையல் மற்றும் கலவை சாதம் (வெரைட்டி ரைஸ்) செய்வதற்கு உகந்ததாக சொல்லப்படுகின்றது, மதுரம் பிராண்ட் அரிசிவகைகள் தற்போது திருவண்ணாமலை மாநகர மெங்கிலும் 750 க்கும் மேற்பட்ட முன்னணி சூப்பர் மார்க்ர்க்கெட்டுட்கள் பலசரக்குகடைகள் அரிசி மண்டிகள் ஆகியவற்றில் அரிசி 5 கிலோ 10 கிலோ மற்றும் 26 கிலோ பேக்குகளில் இப்போது கிடைக்கின்றது என்பது திருவண்ணாமலை மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிச்யான செய்தியாகும் என்று தெரிவித்துள்ளார்.