நாகர்கோவில், மே 11,
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது, தனியார் பள்ளி மாணவி பேட்டி.
பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் பதினொன்றாம் வகுப்பு முதல் இலவச கல்வி அளிப்போம் என கூறியதன் அடிப்படையில் நான் நன்றாக படித்து பள்ளியில் முதல் மதிபெண் பெற்றுள்ளேன் என தனியார் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவி நந்தினி பேட்டி. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் வடிவேல் முருகன் இவர் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார் வடிவேல் முருகன் மகள் நந்தினி நாகர்கோவில் கோட்டார் குமரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றார் மாணவி நந்தினி 495 மதிப்பெண் பெற்று தான் படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் நான் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு 11 ம் வகுப்பில் இலவசமாக படிக்க பள்ளி நிர்வாகம் சலுகை செய்துள்ளது. ஆதலால் நான் நன்றாக படித்தேன் நான் கணிதவியல் குருப்பில் சேர்ந்து டாக்டர் ஆவதே தனது லட்சியம் என கூறினார். எனது தந்தை கஷ்டபட்டுவதை பார்த்து வளர்ந்த நான் நன்றாக படிக்க வேண்டும் என நினைத்து படித்தேன் நான் இந்த அளவிற்க்கு மார்க் எடுக்க எனது பொற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் உதவினார்கள் எனவே அவர்களுக்கு நன்றி கூறுகிறேன் என் நந்தினி தெரிவித்தார்.