மதுரை மே 2,
மதுரையில் பதினெட்டாம் படி சிலம்ப அகாடமியின் மூன்றாம் ஆண்டு விழா மிகசிறப்பாக நடைபெற்றது. இதில் தலைமை ஆசான் சிலம்பச் செல்வன் ஜி.மாரிமுத்து நோபல் சிலம்பம் ரெக்கார்டுக்காக தொடர்ந்து மூன்று மணி நேரம் முப்பது மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் பொய்க்கால் ஆட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு நோபல் ரெக்கார்டுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.