மதுரை மே 06
மதுரை யா.ஒத்தக்கடை பகுதியில் பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் 169 வது வாரத்தின் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் இந்தியன் ரிப்போர்ட்டர் அசோசியன் மாநில நிர்வாகிகள் மற்றும் ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இந்த விழாவானது மதுரை யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் ஒன்றிணைந்து பசுமை பாதுகாப்பு அறக்கட்டளை துவங்கப்பட்டு நாட்டு மக்களின் நலன் கருதி இயற்கையை பாதுகாக்கும் வகையில் தொலை தூர எண்ணம் கொண்டு எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில் ஓர் அமைப்பாக இவர்கள் உருவெடுத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாக வடிவமைப்பு உருவாக்கப்பட்டு முதல் வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் மரக்கன்று நடவுப் பணி செய்து பணிகளை துவங்கிய இந்தக் குழுவினர் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதிகளாக தேர்ந்தெடுத்து அப்பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் போதெல்லாம் ஒருவகை முக்கிய பிரமுகர்களை வரவேற்பு செய்து சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் மரக்கன்று நடவுப்பணி செய்து வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் முன்னோர்கள் நடவு செய்த பழமை வாய்ந்த மரங்கள் இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்கள் நடவு செய்த மரங்களை எல்லாம் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக அகற்றிவிட்டனர் இன்று வெயிலின் தாக்கம் பொறுக்க முடியாத சூழலில் மக்கள் அவதிப்படும் வேளையில் இக்குழுவினரின் இந்த சேவை எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கும் பொருட்டு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் 169 வாரம் என்ற வரிசையில் நடைபெற்ற விழாவில்
பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் பெரியசாமி செயலாளர் காஜா
பொருளாளர் ஸ்டீபன் ராஜா ஆகியோரின் முன்னிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களால் 169 வது மரக்கன்றை நடவு செய்து இயக்கத்தினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பசுமை பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் இளம் உறுப்பினர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.