மதுரை மே 7,
மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி முழு காப்பீட்டுத் தொகையையும் மருத்துவமனைக்கு வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. தவறு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 13 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் முன்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.