மதுரை மே 7,
மதுரையில் ஆதரவற்றோர் மற்றும் யாசகம் பெறுபவர்களை மீட்டு மறுவாழ்வு மற்றும் குடும்பத்தாருடன் இணைக்கும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர காவல்துறை மற்றும் காவல் கரங்கள் இணைத்து ஆதரவற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் யாசகம் பெறுபவர்கள் அனைவரையும் மீட்டு அவர்களின் குடும்பத்தாருடன் இணைத்தல் மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் மறுவாழ்வு மைய அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை மனநல மருத்துவர் மற்றும் மருத்துவமனை உயர் அதிகாரிகள் மதுரை மாநகராட்சி தலைமை சுகாதார அதிகாரி மற்றும் ஓன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி ஆகியோர்களுடன் ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துணை ஆணையர்கள் வடக்கு, துணை ஆணையர் தெற்கு, துணை ஆணையர் போக்குவரத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.