இராமநாதபுரம் ஜூன் 26-
ராமநாதபுரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கையில்,
மதுவிலக்கு ஆயத்தீர்வை, கலால், காவல் ஆகிய துறைகள் குழு அமைத்து வியாபார நோக்குடன் மது பாட்டில் வாங்கிச் செல்வோரை கண்டறிந்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அனுமதி மதுபான கூடங்கள் விதி மீறினால் உரிமத்தை ரத்து வேண்டும்.
நகர், கிராம பகுதி திருவிழாவின் போது சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை வேண்டும். பள்ளிக்கல்வி, பொதுசுகாதாரம் துறைகள் குழு அமைத்து பள்ளி அருகே உள்ள வணிக நிறுவனங்களை ஆய்வு செய்து போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்தால் தக்க நடவடிக்கை எடுத்து நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும். பொதுமக்களும் விழிப்புடனிருந்து போதைபொருளின் பயன்பாட்டை தடுக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். மாவட்ட
டாஸ்மாக் மேலாளர் ஐயப்பன், மதுவிலக்கு
துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், கலால் துறை உதவி இயக்குநர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.