கிருஷ்ணகிரி, மே. 12-
போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா
கிருஷணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி தென்னை நார் கயிறு விடும் தொழில் செய்து வருகிறார் இவருடைய மனைவி லட்சுமி எதிர்பாராத விதமாக கடந்த 2011ம் ஆண்டு உயிரிழந்தார். மகன் மகள் உள்ள நிலையில், தாயின் வளர்ப்பு இல்லாமல் வளர்ந்து வந்த நிலையில், மூத்த மகள் ஹரிஷா(15) இந்த ஆண்டு அகரம் அரசினர் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஹரிஷா 474 மதிப்பெண்கள் எடுத்து அகரம் பள்ளியில் முதலிடம் பிடித்தார். விபரம் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் அறிவெளி இராமமூர்த்தி மற்றும் பள்ளியின் மேலாண்மை குழுவினர் மாணவியை வெகுவாக பாராட்டினார்.
இதுகுறித்து மாணவி கூறியபோது, என்னுடைய தாயார் இருந்திருந்தால் நான் 500 மதிப்பெண் எடுத்திருப்பேன், இருப்பினும் எனது அப்பா தாய் இல்லாத குறையை நீக்கி வளர்த்த காரணத்தால், இந்த மதிப்பெண் எடுக்க முடிந்தது. ஆகையால் இந்த மதிப்பெண் பெற எனது அகரம் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறினார் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த 474 மதிப்பெண் மற்றும் பள்ளியின் முதல் இடத்தை பெற்றமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளனர்.