திருப்பூர் மே:12
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த பள்ளி தேர்வுகளில் பனிரெண்டாம் வகுப்பு திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது 97.45 சதவீதம் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள். பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அரியலூர் மாவட்டம் 97.31 சதவீதம் பள்ளித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இணைந்தொழு தமிழ்நாடு M.P. சாதிக் வாழ்த்துக்கள் தெரிவித்தார். வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவிகளே சாதித்து காட்டியுள்ளனர் மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சியில் மட்டுமல்லாது100-க்கு100 மதிப்பெண் அதிக மதிப்பெண் எடுத்தவர்களிலும் அவர்களே அதிக அளவில் இடம்பெற்று இருக்கின்றனர். அதிலும் திருநெல்வேலி ராமநாதபுரம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 தனியார் பள்ளி மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். தமிழக முழுவதும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இணைந்தொழு தமிழ்நாடு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்M.P. சாதிக் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.