திண்டுக்கல் மே:09
திண்டுக்கல் வட்டாரம், பெரிய கோட்டை கிராமத்தில் இயற்கை விவசாயம் பற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு உழவர் நண்பர்கள் கிராமிய இயற்கை விவசாய குழு தலைவர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.மேலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்து கூறினார்.
மேலும் தற்போது உள்ள அதிகப்படியான வெப்பத்தால் பயிர்களில் நீர் ஆவியாதல் உடன் சத்துக்களும் ஆவியாகிவிடுகின்றன.இதனால் பயிர்கள் வாடுவதோடு இல்லாமல் அதிக வெப்பத்தால் மடிந்து விடுகின்றது.இதை கட்டுபடுத்த மாலை நேரங்களில் இஎம் கரைசல், ஜீவா அமிர்தம் மற்றும் மோர் கரைசல் தெளிப்பதால் பயிர்களுக்கு சத்துக்கள் கிடைக்கிறது.திறன் மிகு நுண்ணுயிர் கரைசல், ஜீவா அமிர்தம் செய்யும் முறை பற்றி செய்து காண்பித்தார்கள்.மேலும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் பார்மர்ஸ் வெல்பர் டிரஸ்ட் மூலம் இயற்கை விவசாய இடுபொருள் லலிதா மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள்.
உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் கலந்து கொண்டு தற்சமயம் மண் பரிசோதனை பற்றிய தொழில்நுட்பங்களை குறித்து விளக்கங்களை எடுத்து கூறினார்.பெரிய கோட்டை கிராமத்தை சேர்ந்து விவசாயிகள் 30 பேர் கலந்து கொண்டார்கள்.இந்நிகழ்ச்சியின் முடிவில் கௌசல்யா நன்றி கூறினார்.