அரியலூர், மே:16
அரியலூர் அருகே பூண்டியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர், புனித பாத்திமா அன்னை மற்றும் ஆரோக்கிய மாதா அடங்கிய கோவிலில் கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் நேற்று இரவு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது இதில் புனித சந்தியாகப்பர் புனித பாத்திமா அன்னை புனித ஆரோக்கிய மாதா ஆகிய தெய்வங்கள் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. பூண்டியின் ஒவ்வொரு தெருவின் வழியாக செல்லும் போது கிராம மக்கள் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சாலையில் முட்டியிட்டு கடவுளை பிராத்திக்கின்றனர்.
இந்நிலையில் ஆலயத்தை வண்ணமயமான மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேலும் ஆடம்பர தேர் பவணியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனிகள் புனித சந்தியாகப்பர் புனித பாத்திமா அன்னை மற்றும் ஆரோக்கிய மாதா சுருவங்களை வைத்து தேர் பவனி நடைபெற்றது.
இவ்விழாவில் சுமார் 1/2 மணிநேரம் வான வேடிக்கை நடைபெற்றது இவ்விழாவில் பூண்டி அருகில் உள்ள கீழப்பழுவூர் கோக்குடி திருமானூர் பெரம்பலூர் அரியலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தேர் பவணியை கண்டுகளித்தனர்.