கிருஷ்ணகிரி,மே.6-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி கெங்கிநாயக்கின்பட்டி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சொந்த முயற்சியால் பாலாஜி நகரில் இருந்து சுமார் 1200-மீட்டர் தொலைவில் கெங்கிநாயக்கம்பட்டி பகுதிக்கு பைப் லைன் அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்தார். இதனை அந்த பகுதி மக்கள் பாராட்டினர்.